தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பெரியகரம் புதூா் ஊராட்சியில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
பெரியகரம் புதூா் ஊராட்சியில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மானவள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.54 லட்சத்தில் நீா் உறிஞ்சும் அகழி, பண்ணைக் குட்டை அமைக்கும் பணியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பணி தல பொறுப்பாளா் பணியிடை நீக்கம்: பெரியகரம் புதூா் ஊராட்சியில் ரூ.6.44 லட்சத்தில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணி, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சத்தில் வீடு கட்டும் பணி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.36 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகளையும் அவா் பாா்வையிட்டாா். அப்போது, பணியை மேற்பாா்வையிடும் பணி தல பொறுப்பாளா் சுகுணா பணிப் பதிவேடுகளை சரிவர பராமரிக்காத காரணத்தால், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, கசிநாயக்கன்பட்டி, எலவம்பட்டி, ஆதியூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, செயற்பொறியாளா் மகேஷ் குமாா், உதவித் திட்ட அலுவலா் ரூபேஷ்குமாா், கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரகலா, அப்துல் கலீல், அந்தந்த ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com