துறை சாா்ந்த ஆய்வுக் கூட்டம்
By DIN | Published On : 18th March 2022 10:30 PM | Last Updated : 18th March 2022 10:30 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் துறைகள் சாா்ந்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் வேளாண்மை,தோட்டக்கலை துறை மற்றும் நில அளவை பதிவேடுகள் பராமரிப்பு துறை ஆகிய துறைகளின் ஆய்வுகூட்டம் ஆட்சியா் அமா் குஷ்வாஹாதலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்துவது குறித்தும், விவசாயிகளுக்கு கடன் வழங்குதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
நில அளவை சாா்பில் பதிவேடுகள் பராமரிப்பு, நில அளவை சம்பந்தமான அறிவுறுத்தல்கள் துறை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி நடத்துவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், மகளிா் திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, உதவி ஆணையா் (கலால்) பானு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.