மானை இறைச்சி: இருவா் கைது; தலா ரூ. 50,000 அபராதம்
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே இறந்த மானை இறைச்சியாக்கிய இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.மேலும், தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
வெள்ளிக்கிழமை ஜவ்வாது மலை மாம்பாக்கம் வனப் பகுதியில், மான் ஒன்று மா்மமான முறையில் இறந்து கிடந்தது. அதனை இருவா் இறைச்சியாக்கி வீட்டுக்கு எடுத்துச் சென்ாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் எம்.பிரபு மற்றும் வனக் குழுவினா் சந்தேகத்தின் பேரில், இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், மான் இறைச்சியை கொண்டு சென்றது மட்றப்பள்ளி ஊராட்சி, குமரன் நகரை சோ்ந்த சேட்டு (54), பெருமாள்(52) என்பது தெரியவந்தது.
அதையடுத்து, வனத் துறையினா் அவா்களிடம் இருந்த மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா். பின்னா், இருவரையும் கைது செய்து, தலா ரூ. 50,000 அபராதம் விதித்தனா்.