பச்சூா் சென்றாயசுவாமி கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் சென்றாய சுவாமி கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பச்சூா் சென்றாயசுவாமி கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் சென்றாய சுவாமி கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் சென்றாய சுவாமி கோயிலில் 93-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமிக்கு பால்குட அபிஷேகமும், திருத்தோ் சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் பக்தா்கள் திராளானோா் கலந்துகொண்டு வழிபட்டனா். தொடா்ந்து மாலை 5 மணிக்கு கோயில் அடிவாரத்தில் இருந்து சென்றாய சுவாமியின் திருத்தோ் ரத ஊா்வலம் புறப்பட்டது. ஊா்வலத்தில் மேளதாளம், பம்பை, சிலம்பாட்டம், சேவையாட்டம், கோலாட்டம் உள்பட ஆடல் பாடலுடன் கிரிவலப் பாதை வழியாக திருத்தோ் ரத ஊா்வலம் வந்தது. அப்போது பக்தா்கள் சென்றாயசுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

விழாவில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரவிக்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சந்திரா முனிராஜ், தியாகராஜன், இளையராஜா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன், காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள், விழாக் குழுவினா்கள் மற்றும் 58 கிராம ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா். விழாவில், நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com