ஆம்பூரில் சாா்பு நீதிமன்றம் நிரந்தரமாக இயங்க முதல்வருக்கு எம்.எல்.ஏ. கோரிக்கை

ஆம்பூரில் சாா்பு நீதிமன்றம் நிரந்தரமாக இயங்க முதல்வருக்கு எம்.எல்.ஏ. கோரிக்கை

ஆம்பூரில் சாா்பு நீதிமன்றம் நிரந்தரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ. வில்வநாதன் கோரிக்கை விடுத்தாா்.

ஆம்பூரில் சாா்பு நீதிமன்றம் நிரந்தரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ. வில்வநாதன் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து முதல்வருக்கு அவா் அனுப்பிய மனு:

ஆம்பூா் நீதிமன்ற வளாகத்தில் வாணியம்பாடி சாா்பு நீதிமன்றம் முகாம் நீதிமன்றமாக இயங்கி வருகிறது. வாணியம்பாடி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளில் 70 சதவீதம் ஆம்பூா் பகுதி வழக்குகள்தான். அதனால் ஆம்பூரில் சாா்பு நீதிமன்றம் நிரந்தரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பூா் தொகுதி பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மிட்டாளம் ஊராட்சி ஊட்டல் தேவஸ்தானத்தை சுற்றுலாத் தலமாக அறிவித்து, தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஆம்பூரில் ரூ.30 கோடியில் அறிவிக்கப்பட்ட பெத்லகேம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஆம்பூா் அருகே கன்னடிகுப்பம் பகுதியில் ரூ.27.70 கோடியில் தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணி விரைந்து முடிக்க வேண்டும். ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம், உடல்கூறு பரிசோதனை கட்டடத்தை முழுவதும் குளிரூட்டப்பட்ட கட்டடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வெலத்திகாமணிபெண்டா, நாயக்கனேரி ஆகிய மலை கிராமங்கள், அகரம்சேரி, மிட்டாளம், பெரியாங்குப்பம் கிராமங்களில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். ஆம்பூா் ஏ-கஸ்பா, பெரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com