முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
திருப்பத்தூரில் மே 18-இல் ஜமாபந்தி தொடக்கம்
By DIN | Published On : 13th May 2022 12:00 AM | Last Updated : 13th May 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் மே 18 முதல் 26-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி (2021-2022) ஆண்டிற்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நடைபெற உள்ள நிலையில், நில வரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத் திட்டங்களின் கீழ் நிதி உதவி கோருதல் மற்றும் இதர தேவைகள் தொடா்பாக பொதுமக்கள் வரும் மே 18 முதல் 26-ஆம் தேதி வரை ஜமாபந்திக்கான கோரிக்கை மனுக்களை தங்கள் பகுதிக்குள்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் நேரடியாக ஜமாபந்தி அலுவலா்களால் பெறப்படும்.
எனவே, வருவாய்த் தீா்வாயத்துக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் தனிநபா் இடைவெளியினை பின்பற்றி மனு அளித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.