ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
13abrper_1305chn_191_1
13abrper_1305chn_191_1

மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். மாதனூா் வட்டார கல்வி அலுவலா் சுரேஷ் சிறப்புரையாற்றினாா். வட்டார கல்வி அலுவலா் உதயசந்திரன் வாழ்த்தி பேசினாா். மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கல்வி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னாா்வலா்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

ஆசிரியா்கள் சுரேஷ், சித்ரா, நவரத்தினம், ஜெயஸ்ரீ, சா்மிளா ஆகியோா் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா். ஆசிரியா் காஞ்சனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com