சாலையோரத்தில் பெண்களுக்கு கத்திகுத்து: ஒருவர் உயிரிழப்பு

ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் கௌசர் என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
சாலையோரத்தில் பெண்களுக்கு கத்திகுத்து: ஒருவர் உயிரிழப்பு


ஆம்பூரில் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீது ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் கௌசர் என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் வெளியே ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த நபர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த பெண்களை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் கௌசர் (27) மற்றும் தனம் (29) என்ற பெண்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இதையடுத்து, உடனிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் கௌசர் என்ற பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த தனம் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கத்தியால் குத்திய நபரைப் பிடித்து விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பதும் மூன்று மாதங்களுக்கு முன்பு தனம் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சில நாள்கள் வாழ்ந்து வந்த நிலையில் தேவேந்திரனை விட்டு தனம் பிரிந்து ஆம்பூர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் தனத்தை தேடி நேற்று நள்ளிரவு ஆம்பூர் பகுதிக்கு வந்து சாலையின் ஓரம் காலணி கடையின் வெளியே உறங்கிகொண்டிருந்த தனத்தை கத்தியால் குத்தியுள்ளார். அப்போது அதைத் தடுக்க வந்த கௌசர் என்ற பெண்ணிற்கு தவறுதலாக தொண்டை பகுதியில் கத்தி குத்தப்பட்டு, அவர் உயிரிழந்திருப்பது காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கௌசரின் உடலை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த ஆம்பூர் நகர காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கத்தியால் குத்திய  தேவேந்திரன் என்பவரை கைது செய்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த கௌசருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com