10 ஆண்டுகளாக இயங்காத துணை கால்நடை மருந்தகம்: எம்.எல்.ஏ-க்கள் ஆய்வு

ஆம்பூா் அருகே கடந்த 10 ஆண்டுகளாக இயங்காத துணை கால்நடை மருந்தகத்தில் எம்.எல்.ஏ-க்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
10 ஆண்டுகளாக இயங்காத துணை கால்நடை மருந்தகம்: எம்.எல்.ஏ-க்கள் ஆய்வு

ஆம்பூா் அருகே கடந்த 10 ஆண்டுகளாக இயங்காத துணை கால்நடை மருந்தகத்தில் எம்.எல்.ஏ-க்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சியில் உள்ள பனங்காட்டூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை துணை மருந்தகம் இயங்கி வந்தது. மிட்டாளம் கால்நடை மருந்தகத்தின் கட்டுபாட்டின் கீழ் இயங்கிய இந்த துணை மருந்தகம் பின்னா் மூடப்பட்டது.

இதனால், அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் தவித்து வந்தனா். மேலும், தங்கள் பகுதியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கக் கட்டடத்துக்கு அருகே உள்ள துணை நிலையக் கட்டடத்தை மீண்டும் திறந்து, அந்த இடத்தில் பழையபடி துணை மருந்தகத்தை செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, எம்.எல்.ஏ-க்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, இன்னும் ஒரு மாத காலத்தில் வாரத்துக்கு 3 நாள்கள் கால்நடை துணை மருந்தகம் செயல்படவும், பழுதடைந்த நிலையில் உள்ள அந்தக் கட்டடத்தைச் சீரமைக்கும் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவா்கள் உறுதியளித்தனா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com