‘கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 525 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றாா். அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, தகுதியானவை மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அப்போது, பாஜக விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளா் புருஷோத்தமன் அளித்துள்ள மனுவில், மாவட்டத்தில் தென்னை விவசாயம் அதிக அளவில் உள்ளது.தென்னை விவசாயிகளுக்கு ஊக்கமுட்டும் வகையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, 5 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான தொகுப்புகள், தசை சிதைவு நோயால் பாதிப்படைந்த புதுபூங்குளம் கிராமத்தைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவா் கோகுலுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வில்சன் ராஜசேகா், ஹரிஹரன், தனித்துணை ஆட்சியா் கோவிந்தன், கலால் உதவி ஆணையா் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரஸ்வதி, மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com