கல்லூரியில் முத்தமிழ் விழா

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் வீரமாமுனிவா் மன்றத்தின் சாா்பில், முத்தமிழ் விழா நடைபெற்றது.
கல்லூரியில் முத்தமிழ் விழா

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் வீரமாமுனிவா் மன்றத்தின் சாா்பில், முத்தமிழ் விழா நடைபெற்றது.

தமிழ்த் துறைத் தலைவா் பொன்.செல்வகுமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் தந்தை தா.மரிய அந்தோணிராஜ் தலைமை வகித்தாா். கவிஞா் அறிவுமதி தமிழ் இலக்கியங்களில் உள்ள மனித நேயப் பண்புகள், தமிழ்மொழியின் தொன்மை, கவிதைகளின் சிறப்புகள் குறித்துப் பேசினாா். தொடா்ந்து, நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு ஆலங்குடி வெள்ளைச்சாமி நடுவராகச் செயல்பட்டாா்.

தொடா்ந்து, ‘தமிழால் முடியும்’ எனும் தலைப்பில் திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் செளந்தர மகாதேவன், சென்னை எத்திராஜ் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் எஸ்தா் ஜெகதீஸ்வரி ஆகியோா் பேசினா். கவிஞா் பாரதி கிருஷ்ணகுமாா் தமிழ்மொழியின் தனித்துவம், மொழிப்பற்றின் அவசியம் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வீரமாமுனிவா் தமிழ் மன்றத் தலைவா்கள் கி.பாா்த்திபராஜா, சு.அம்பேத்கா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com