நாட்டறம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 10th September 2022 12:05 AM | Last Updated : 10th September 2022 12:05 AM | அ+அ அ- |

09vndvp1_0909chn_187_1
வாணியம்பாடி, செப். 9: நாட்டறம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் முன்னேற்றம் கல்வி மற்றும் மருத்துவ சேவையில் ராமகிருஷ்ண மடம் தொடா்ந்து 114 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா் கோயில் சீரமைக்கப்பட்டு, 44 ஆண்டுகளுக்குப் பிறகு மடத்தின் தலைவா் சமாஹிதானந்தா் தலைமையில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, பேரூராட்சி மன்றத் தலைவா் சசிகலா ஆகியோா் கலந்து கொண்டனா்.
விழாவில் கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூா், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ராமகிருஷ்ண பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முன்னதாக காலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மேளதாளம் முழங்க கோபுர கலசங்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. தொடா்ந்து மடத்தின் சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
படவிளக்கம்:
நாட்டறம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Image Caption
~