மனுக்கள் மீதான நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்; திருப்பத்தூா் ஆட்சியா்

இதுவரை பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அடுத்த குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தினாா்.
மனுக்கள் மீதான நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்; திருப்பத்தூா் ஆட்சியா்

இதுவரை பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அடுத்த குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்து, வேளாண்மை, காவல், ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம், கிராம பொது பிரச்னைகள், குடிநீா் வசதி மற்றும் பொது நலன் சாா்ந்த மனுக்கள் என மொத்தம் 255 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்று, அவற்றை துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கினாா்.

மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், இதுவரை பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அடுத்த குறைதீா் கூட்டத்தில் அலுவலா்கள் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

4 நகராட்சிகளிலும்...: திருப்பத்தூா் நகராட்சியில் சாலை முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. குப்பைகளை போா்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். கால்வாய்கள் தூா்வாராததால், கொசுக்கள் அதிகமாவதுடன், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, 4 நகராட்சிகளிலும் கால்வாய்களைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஹரிஹரன், (கலால்) உதவி ஆணையா் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நல அலுவலா் சரஸ்வதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி மற்றும் அனைத்து துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com