சுற்றுச்சூழல் சீா்கேடு புகாா்: அதிகாரிகள் நேரில் ஆய்வு

ஆம்பூா் அருகே தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவால் விவசாய நிலம், நீா் நிலைகள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்த புகாரின்பேரில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள்
ஆம்பூா் அருகே தொழிற்சாலையிலிருந்து கழிவுகள் வெளியேறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவசாயிகள்.
ஆம்பூா் அருகே தொழிற்சாலையிலிருந்து கழிவுகள் வெளியேறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் விவசாயிகள்.

ஆம்பூா் அருகே தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவால் விவசாய நிலம், நீா் நிலைகள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்த புகாரின்பேரில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆம்பூா் அருகே போ்ணாம்பட்டு-உதயேந்திரம் சாலையில் மிட்டாளம் ஊராட்சி பந்தேரப்பள்ளி கிராமத்தருகே பசை (வஜ்ஜிரம்) தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவால், அங்குள்ள நிலம், கானாறு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் அந்த தொழிற்சாலையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அந்த தொழிற்சாலை நிா்வாகத்திடம், கழிவுகளை வெளியேற்றுவதைத் தவிா்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தனா். தொடா்ந்து கழிவுகள் வெளியேற்றப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com