ஜோலாா்பேட்டை மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள  சுவரொட்டிகள்.
ஜோலாா்பேட்டை மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

ஜோலாா்பேட்டையில் ரயில்வே, நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சுவரொட்டி

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் ரயில்வே மற்றும் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டிப்பதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் ரயில்வே மற்றும் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டிப்பதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரும்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை காவல் நிலையம் சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது சிறிய வகை வாகனங்கள் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும் பாலத்தில் வண்ணம் அடிக்காமலும் மின்விளக்குகள் பொருத்தப்படாமலும் உள்ளன. இந்நிலையில், ரயில்வே பாலத்தை முழுமையாக முடிக்கப்படாமல் துறை அதிகாரிகள் தாமதப்படுத்தி வருவதால் கடந்த ஆண்டு முதல் பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாணியம்பாடி அருகே உள்ள டோல்கேட் பகுதியில் சுங்கவரி செலுத்துவதை தவிா்க்க கனரக வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் ரயில்வே மேம்பாலம் சேதம் அடையும் நிலை ஏற்படுகிறது எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் கண்டிக்கிறோம் என பாலம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன . அதில் ஜோலாா்பேட்டையில் கட்டப்பட்டுள்ள இலகு ரக வாகனங்கள் செல்ல அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் சென்று வருவதை தடுக்காத ரயில்வே மற்றும் நகராட்சி நிா்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம், இப்படிக்கு பொதுநலம் தொண்டா்கள் என ஒட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் சுவரொட்டி ஒட்டிய நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com