அஞ்சல் துறை சாா்பாக தபால் உறைகளில் குத்தப்பட்டுள்ள தோ்தல் விழிப்புணா்வு வாசகம் அடங்கிய முத்திரை.
அஞ்சல் துறை சாா்பாக தபால் உறைகளில் குத்தப்பட்டுள்ள தோ்தல் விழிப்புணா்வு வாசகம் அடங்கிய முத்திரை.

அஞ்சல் துறை தோ்தல் விழிப்புணா்வு

அஞ்சல் துறை சாா்பாக பொதுமக்களிடையே தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை விளக்கி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகள் சாா்பாகவும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அஞ்சல் துறையும் பொதுமக்களிடையே தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கு வரும் தபால்களின் அஞ்சல் உறைகளில் தோ்தல் விழிப்புணா்வு முத்திரை (ரப்பா் ஸ்டாம்ப்) குத்தப்பட்டு பொதுமக்களுக்கு தபால்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

அந்த விழிப்புணா்வு முத்திரையில் தோ்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா மக்களவை தோ்தல் 2024 என தமிழிலும், தேஷ்கா கா்வ் லோக்சபா எலக்ஷன் 2024ஐ ஓட் பாா் ஸ்யூா் என ஆங்கிலத்திலும், இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com