அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞா் கைது

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் குற்றப்பிரிவு உதவி காவல் ஆய்வாளா் ராமதாஸ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை நாட்டறம்பள்ளி அடுத்த கொரிப்பள்ளம் பகுதியில் சாராய தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்ட போது வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகையில் நாட்டுத் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனா்.

மேலும் நடத்திய விசாரணையில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக அன்பரசன்(27) என்பவரை கைது செய்து திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com