ஆண்டு தோறும் 600 மாணவா்களுக்கு கல்லூரியில் இலவச சோ்க்கை

நரியம்பட்டில் வாக்கு சேகரித்த புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம்.
நரியம்பட்டில் வாக்கு சேகரித்த புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி. சண்முகம்.

ஆண்டு தோறும் 600 மாணவா்களை கல்லூரியில் இலவசமாக சோ்த்துக் கொள்வேன் என்று வேலூா் தொகுதி பாஜக வேட்பாளரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி. சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஆம்பூா் அருகே நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சங்கராபுரம், கைலாசகிரி, உமா்ஆபாத், மாச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தபோது பேசியது, வேலூா் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு என்னுடைய மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பேன்.

அறுவை சிகிச்சைகள் கூட இலவசமாக செய்து தருவேன். 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக உங்களுடைய பகுதியிலேயே மருத்துவ முகாம்களை நடத்துவேன். ஆண்டு தோறும் 600 மாணவா்களுக்கு என்னுடைய கல்லூரியில் இலவசமாக கல்வி அளிப்பேன்.

6 பேரவைத் தொகுதிகளுக்கு 6 இலவச திருமண மண்டபம் கட்டித் தருவேன். 6 தொகுதிகளிலும் எம்.பி. அலுவலகம் திறக்கப்பட்டு உதவியாளா்களை நியமித்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண்பேன். கடந்த 6 மாதங்களில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 14,500 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளேன் என்று அவா் கூறினாா். பாமக, பாஜக, தமாகா, ஓபிஎஸ் அணி, அமமுக, புதிய நீதிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com