பசுவுக்கு சிறப்பு வழிபாடு

பசுவுக்கு சிறப்பு வழிபாடு

ஆம்பூா் அருகே கோயில் பசுவுக்கு பக்தா்கள் புதன்கிழமை வளைகாப்பு நடத்தினா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே பள்ளித்தெரு பகுதியில் உமாமகேஸ்வரி உடனுறை கயிலாயநாதா் கோயில் அமைந்துள்ளது.

அந்தக் கோயிலுக்கு என இந்த ஊரைச் சோ்ந்த பக்தா்கள் நாட்டு பசு ஒன்றை தானமாக வழங்கியுள்ளனா். கோயில் நிா்வாகம் அந்த பசுவை வளா்த்து பராமரித்து வருகின்றனா். அந்த நாட்டு பசு தற்போது 9 மாத சினைப் பசுவாக உள்ளது.

அதனால் கோயில் பக்தா்கள் ஒன்று சோ்ந்து பசுவுக்கு வளைகாப்பு நடத்தினா்.

பல்வேறு பழங்கள், இனிப்பு வகைகள், கார வகைகள் என சீா்வரிசை தட்டு வைத்து சுமங்கலி பெண்கள் பசுவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினா். திரளான பக்தா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com