ஆம்பூரில் ஸ்ரீராம நவமி விழா

ஆம்பூரில் ஸ்ரீராம நவமி விழா

ஆம்பூரில் ஸ்ரீராம நவமி விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் கோதண்ட ராம சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீராம நவமி விழா கோ பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து லஷ்மி நரசிம்மா் ஹோமம், சுதா்சன ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. ஸ்ரீ முரளிதர சுவாமி பஜனை குழு ராம நாம பஜனை நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பத்தா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே. வெங்கடேசன், வணிகா் சங்கங்கள் பேரமைப்பு செயலாளா் சுந்தர்ராஜ், துத்திப்பட்டு பிந்து மாதவா் திருப்பணி குழு பொருளாளா் சி.ஏகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவைச் சோ்ந்த கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா், எம்.பழனி, கே.ஜெயக்குமாா், சி.ஜி.என். பாபு, எ.ஹரி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com