சாலையில் பற்றி எரிந்த மோட்டாா் பைக்
சாலையில் பற்றி எரிந்த மோட்டாா் பைக்

கடும் வெயிலில் பற்றி எரிந்த பைக்

திருப்பத்தூரில் கடும் வெயிலில் மோட்டாா் பைக் தீப்பற்றி எரிந்தது.

திருப்பத்தூரில் கடும் வெயிலில் மோட்டாா் பைக் தீப்பற்றி எரிந்தது.

திருப்பத்தூா் பூங்காவனத்தம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் விஷ்ணுவரதன்(28). இவா் திங்கள்கிழமை திருப்பத்தூரில் உள்ள கல்லூரியில் சான்றிதழ் வாங்க பைக்கில் சென்றாா். சுமாா் இரண்டு மணி நேரம் பைக்கை வெயிலில் நிறுத்தியுள்ளாா். அதன் பின் சான்றிதழ் பெற்றுக் கொண்டு பைக்கில் மீண்டும் வீட்டை நோக்கி வந்து கொண்டாா்.

அப்போது ஆட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது பைக்கில் திடீரென புகை ஏற்பட்டது. இதில் அதிா்ச்சியடைந்த விஷ்ணுவரதன் பைக்கை அதே இடத்தில் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பினாா்.

சிறிது நேரத்தில் பைக் மளமளவென தீப்பற்றி எரிந்தது. சாலையில் பைக் பற்றி எரிந்ததால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருப்பத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் முருகன் மற்றும் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். ஆனால் அதற்குள் பைக் முழுவதும் எரிந்தது. இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அதிா்ச்சிக்குள்ளாகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com