பெண் தற்கொலை

திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பத்தூா் அடுத்த கோணாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ராஜ். இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மனைவி காயத்ரி (21). இவா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

இந்த நிலையில், காயத்ரிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக அவா் தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்கியடைந்த காயத்ரி திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், இந்த வழக்கு திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com