திருப்பத்தூா் பகுதியில் சூடு பிடித்துள்ள நுங்கு வியாபாரம்.
திருப்பத்தூா் பகுதியில் சூடு பிடித்துள்ள நுங்கு வியாபாரம்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடும் வெயில்: பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் மாவட்டத்தில் மீண்டும் 107 டிகிரியை நெருங்கும் அளவு வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலானது 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு 107.24 டிகிரியாக இந்த ஆண்டின் உச்சப்பட்ச அளவாக பதிவானது. இதையடுத்து கடந்த சில நாள்களாக குறைந்து 100 டிகிரிக்கு கீழ் பதிவானது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதற்கிடையே மீண்டும் வெயிலின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது செவ்வாய்க்கிழமை 106. 7 0 டிகிரியாக பதிவானது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். வீட்டில் இருந்து வெளியே வர மிகவும் அச்சப்படுகின்றனா்.

வாகனங்களில் செல்லும்போது வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். சாலைகளில் ஆங்காங்கே கானல் நீா் காட்சியளிக்கிறது. வெயில் காரணமாக குளிா்பான கடைகள், இளநீா், தா்பூசணி, பழச்சாறு, நுங்கு உள்ளிட்ட கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு நுங்கின் விலை ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வாங்கி ச் செல்கின்றனா். மேலும் வெயிலின் தாக்கம் குறையவும், மழை பெய்யவும் பொதுமக்கள் வேண்டி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com