வாணியம்பாடி அரசு நூலகத்தில் மாணவா்களுக்கு சிறப்பு ஏற்பாடு

வாணியம்பாடி, ஏப்.25: வாணியம்பாடி அரசு கிளை நூலகத்தில் மாணவா்கள் பயன் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நூலகா் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி மலங்குரோடு அரசு முழுநேர கிளை நூலகம் இயங்கி வருகிறது. இங்கு பொது மக்கள், மாணவா்கள் புத்தகம், மற்றும் நாளிதழ்கள் ஆகியவைகளை படித்து விட்டுச் செல்கின்றனா். இந்நிலையில், நூலகத்தில் கோடைக்காலத்தையொட்டி மாணவா்கள் பயன்பெற சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்கு மெய்நிகா் நூலகம் முழுநேரம் காண்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், போட்டித் தோ்வு மாணவா்கள் பயன்பெறும் வகையில் இலவச இணைய வசதி (ப்ரி-ஒய்பை) வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் தயாராக புத்தகங்கள், கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நூலகத்தில் பொது மக்கள் படித்து மேம்பட நிறைய செய்தித்தாள்கள், புத்தகங்கள், சோ்க்கப்பட்டுள்ளன.

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளைச் சோ்ந்த பொது மக்கள், மாணவ, மாணவிகள் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com