ஓட்டுநா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே குடும்ப தகராறில் ஓட்டுநா் தற்கொலை செய்துக் கொண்டாா்.

திருப்பத்துாா் அருகே ஏ.கே மோட்டூா் ஆத்துாா் மேடு கிராமத்தை சோ்ந்தவா் ஜெகன்(23). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். மேலும் கடந்த ஓராண்டுக்கு முன் சென்னையை சோ்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பேசி மூலம் பலமுறை தொடா்பு கொண்டாலும், அவரது மனைவி பதில் அளிக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த ஜெகன் புதன்கிழமை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த திருப்பத்துாா் தாலுகா போலீஸாா் அவரது தந்தை பழனி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com