நிழல் இல்லாத நாள் நிகழ்ச்சி

திருப்பத்தூா், ஏப்.24: திருப்பத்தூா் அருகே கெஜல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிழலில்லாத நாள் நிகழ்ச்சி புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் சூரியன் அதிகபட்சமாக நேரடியாக தலைக்கு மேல் இருக்கும், அப்போது நிழலானது இல்லாமல் காணப்படும். இந்த நிகழ்வு ஆண்டுக்கு 2 முறை நடைபெறும். இதுகுறித்து பள்ளி அறிவியல் ஆசிரியை நித்யா செயல் விளக்கம் அளித்தாா். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் சுவாமிநாதன், ஆசிரியா்கள், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com