பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு

திருப்பத்தூா், ஏப்.24: திருப்பத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 3 பவுன் நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே ஆம்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் விஜயகாந்த் மனைவி சரஸ்வதி(34). இவா்கள் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள தனியாா் பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை கந்திலியில் இருந்து திருப்பத்துாருக்கு தனியாா் பேருந்தில் வந்தனா். அப்போது சரஸ்வதி 3 பவுன் தங்க நகையை தனது கைப்பையில் வைத்து எடுத்து வந்தாா். பின்னா் திருப்பத்துாா் பேருந்துநிலையத்தில் இறங்கிய சரஸ்வதி, தன்னிடம் இருந்த மூன்று பவுன் தங்க நகை திருடு போனதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின் பேரில், திருப்பத்துாா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com