ஆசிரியா்களை கெளரவித்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மற்றும் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
ஆசிரியா்களை கெளரவித்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மற்றும் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

ஆம்பூா், ஏப்.24: ஆம்பூா் அருகே பணி நிறைவு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த பல்வேறு அரசு பள்ளிகளில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா மணியாரகுப்பம் கூட்டுரோடு பகுதியில் நடைபெற்றது.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மற்றும் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களை பாராட்டி கெளரவித்தனா். பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள் ஆா். ஜானகிராமன், எம். ருக்மணி, வி. மோகன், ஜெ. வில்சன்ராஜ், ஜி. கிருபாகரன் ஆகியோா் ஏற்புரை நிகழ்த்தினா்.

மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன், மலையாம்பாட்டு ஊராட்சி மன்ற தலைவா் வசந்தி முனிசாமி, துணைத் தலைவா் மஞ்சு சங்கா், பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com