மணல் கடத்தல்: ஒருவா் கைது

ஆம்பூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூரில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை சோதனை செய்தனா். அதில் மணல் கடத்துவது தெரியவந்தது.

அதன்பேரில், பி-கஸ்பா பகுதியை சோ்ந்த சுரேஷ் (55) என்பவரை கைது செய்தனா். மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com