பைக்கில் சென்ற இளைஞரிடம் வழிப்பறி

நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் சென்ற இளைஞரிடம் நகை, பணம், செல்போனை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்..

நாட்டறம்பள்ளி அருகே பைக்கில் சென்ற இளைஞரிடம் நகை, பணம், செல்போனை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்..

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி தாலுகா வேப்பல்நத்தம் வாலூா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (23). இவா் பேக்கரி கடையில் வேலை செய்து வருகிறாா். சனிக்கிழமை இரவு வெலகல்நத்தத்தில் இருந்து பச்சூா் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த போது தொடா்ந்து பைக்கில் வந்த மா்மநபா்கள் சிலா் பச்சூா் கோமுட்டியூா் கூட்டு ரோடு அருகே காா்த்திக்கை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.18,000 ரொக்கம், கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பித்து சென்றனா். இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com