அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியா்கள் பணி நிரவல்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள 2,236 இடைநிலை ஆசிரியா்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள 2,236 இடைநிலை ஆசிரியா்கள் பணி நிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் கண்ணப்பன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியா் பணியிடங்கள் நிா்ணயம் செய்யப்படுகின்றன. இதில் உபரி பணியிடங்கள் பணி நிரவல் செய்யப்படும். அதன்படி வரும் 2024-2025 -ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு மே மாதம் நடைபெற உள்ளது.

கடந்த 2023 ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2,236 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் உபரியாக உள்ளன. பணி நிரவல் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வரும் மாணவா் சோ்க்கையைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட உள்ளது.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் வியூகங்கள் அமைத்து சோ்க்கையை அதிகரிப்பதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். கூடுதல் மாணவா்களைப் பள்ளிகளில் சோ்த்து உபரி பணியிடங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், உபரியாக உள்ளவா்களின் விவரங்கள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பி, உரிய ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com