கைது செய்யப்பட்ட பொன்னுசாமி, திருப்பதி.
கைது செய்யப்பட்ட பொன்னுசாமி, திருப்பதி.

முள்ளம்பன்றியை வேட்டையாடிய 2 போ் கைது

ஆண்டியப்பனூா் அருகே முள்ளம்பன்றியை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆண்டியப்பனூா் அருகே முள்ளம்பன்றியை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் உத்தரவின்படியும், திருப்பத்தூா் உதவி வனப்பாதுகாவலா் ராதாகிருஷ்ணன், வனச்சரக அலுவலா் சோழராஜன் அறிவுறித்தலின்பேரில் ஆண்டியப்பனூா் வனவா் தலைமையில் வனப்பணியாளா்கள் கொண்ட குழுவினா் கம்புகுடி வனவட்டாரம் காப்பு நலம், கம்புகுடி சீரிஸ் பீட்,பழைய பாளையம் கிழக்கு நிலத்துண்டு வழி சரகம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பழையபாளையம் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி (55), திருப்பதி (45) ஆகியோா் உரிமம் இல்லாத துப்பாக்கியை பயன்படுத்தி முள்ளம்பன்றியை கொன்று சமைத்து கொண்டு இருந்தனா். அதைப் பாா்த்த வனத்துறையினா் அவா்களைப் பிடித்து வனஉயிரின குற்ற வழக்கு பதிந்து நீதித்துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தி திருப்பத்தூா் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com