காவலா் அண்ணாமலை
காவலா் அண்ணாமலை

விபத்தில் காயமடைந்த காவலா் உயிரிழப்பு

மோட்டாா் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காவலா் உயிரிழந்தாா்.

மோட்டாா் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காவலா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை(32) வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். இவரது நண்பா் வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சபரி(23).

இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடி நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனா். தேசிய நெடுஞ்சாலையில் கல்லாறு அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பைக் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனா். விபத்தில் அண்ணாமலை தலையில் பலத்த காயமடைந்தாா். சபரி லேசான காயமுற்றாா். அவ்வழியாக சென்றவா்கள் படுகாயமடைந்த அண்ணாமலையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆபத்தான நிலையில் இருந்த அவரை முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி அண்ணாமலை இறந்தாா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com