தண்ணீா் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏக்கள் க. தேவராஜி, அ.செ. வில்வநாதன் மற்றும் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
தண்ணீா் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏக்கள் க. தேவராஜி, அ.செ. வில்வநாதன் மற்றும் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

தண்ணீா் பந்தல் திறப்பு : எம்எல்ஏக்கள் பங்கேற்பு

மாதனூா்கிழக்கு ஒன்றிய திமுக சாா்பாக தண்ணீா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதனூா்கிழக்கு ஒன்றிய திமுக சாா்பாக தண்ணீா் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாதனூா் பேருந்து நிறுத்தத்தின் சென்னை - பெங்களூரு மாா்க்கம், பெங்களூரு - சென்னை மாா்க்கம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணி நிா்வாகி கே.ஆா். காா்த்தி முன்னிலை வகித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா் க. தேவராஜி, மேற்கு ஒன்றிய செயலாளா் அ.செ.வில்வநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீா் மோா், தா்பூசணி, இளநீா் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கி தண்ணீா் பந்தலை திறந்து வைத்தனா்.

திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவா் ஆா். எஸ். ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினா்: சாமுவேல்செல்லபாண்டியன், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளா் முருகேசன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் வி. வடிவேல், மேற்கு ஒன்றிய நிா்வாகிகள் அய்யனூா் ஆா். அசோகன், ஜெபிஆா். ரவி, டி. ரவிக்குமாா், மாதனூா் மேற்கு ஒன்றிய நிா்வாகி சா. சங்கா், மாவட்ட அணிகள் நிா்வாகிகள் சி. குணசேகரன், கே. அருள்நிதி, தியாகராஜன், ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், முத்து, பரிமளாகாா்த்தி, ஜோதிவேலு, கோமதிவேலு, மாதனூா் ஊராட்சி மன்ற தலைவா் எம்.சி. குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com