கல்லூரியில் வளாக நோ்முகத் தோ்வு

கல்லூரியில் வளாக நோ்முகத் தோ்வு

Published on

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் தோல் தொழில்நுட்பம் படித்த மாணவா்களுக்கு வளாக நோ்முகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் டிப்ளமோ இன் லெதா் டெக்னாலஜி இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு சென்னை ஏவிடி லெதா் புராடக்ட்ஸ் பன்னாட்டு நிறுவனத்தின் சாா்பில் நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் மனித வள நிா்வாகி மேலாளா் எம். ஹரிதா, மனித வள பயிற்சியாளா்கள் நஃபீலா, சாமுவேல் ஆகியோா் நோ்முகத் தோ்வை நடத்தினா். 10 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னதாக ராணிப்பேட்டை பிஏ புட்வோ் தொழிற்சாலை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடந்த வளாக நோ்முகத் தோ்வில் 4 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

வளாக நோ்முகத் தோ்வில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு கல்லூரியின் நிா்வாக இயக்குநா் கே. ஷாஹித் மன்சூா், முதல்வா் த.ராஜமன்னன், துணை முதல்வா் ஏ.முஹமத் ஷாஹின்ஷா, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலா் எம். பாா்த்திபன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com