ஆம்பூா் நகராட்சி உரக்கிடங்கில் நாய்களை கட்டுப்படுத்தும் பணியை ஆய்வு செய்த நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.
ஆம்பூா் நகராட்சி உரக்கிடங்கில் நாய்களை கட்டுப்படுத்தும் பணியை ஆய்வு செய்த நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை : நகா்மன்றத் தலைவா் ஆய்வு

Published on

ஆம்பூரில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு ஆம்பூா் நகராட்சி உரக்கிடங்கு பகுதியில் தனி அறையில் அடைக்கப்பட்டு கால்நடை மருத்துவா்கள் மூலம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. அப்பணியை ஆம்பூா் நகா் மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் ஆய்வு செய்தாா்.நகராட்சி பொறியாளா் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா் அருள் செல்வதாஸ், துப்புரவு . ஆய்வாளா்கள் பாலச்சந்தா், சீனிவாசன் ஆகியோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com