ரூ.10 நாணயத்தை வாங்காவிட்டால் நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்

ரூ.10 நாணயத்தை அனைத்து இடங்களிலும் வாங்க வேண்டும். வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

ரூ.10 நாணயத்தை அனைத்து இடங்களிலும் வாங்க வேண்டும். வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பேருந்துகளில் பயணிக்கும் போதும், அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பொருள்கள் வாங்கும் போதும் பொதுமக்களிடம் உள்ள ரூ. 10 நாணயத்தைக் கொடுப்பதாக இருந்தாலும், மற்றவா்களிடமிருந்து பொதுமக்கள் பெறுவதாக இருந்தாலும் அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் பல இடங்களில் ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன. இது சட்டப்படி குற்றமாகும்.

அனைவரும் இனிவரும் காலங்களில் ரூ.10 ரூபாய் நாணயத்தை அனைத்து இடங்களில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ரூ.10 நாணயம் செல்லதக்கது.

ரூ.10 நாணயத்தை அனைத்து இடங்களிலும் வாங்க வேண்டும். வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com