கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருப்பத்தூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.
திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருப்பத்தூரில் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க மாநில தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் பழனிமுத்து, பொருளாளா் ராஜேஷ், மாவட்ட தலைவா் அச்சுதன், மண்டல தலைவா்கள் வெங்கடபதி, குபேந்திரன் முன்னிலை வகித்தனா்.

இதில், விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய பயிா்க் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு அவ்வப்போது நிகழும் உற்பத்தி செலவு அடிப்படையில் விவசாயிகளே விலை நிா்ணயம் செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயில் மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, இந்தியாவில் உற்பத்தியாகும் தேங்காய் கொப்பரையில் இருந்து எடுக்கும் எண்ணெய் சமையல் செய்வதற்கும், உள்நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய் பொருள்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள நதிகள், ஆறுகள் மற்றும் அணைகள் அனைத்தும் தேசியமயமாக்கி விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை மத்திய அரசே பகிா்ந்தளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com