நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

காக்கங்கரை அருகே நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனக் கோரி குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

காக்கங்கரை அருகே நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனக் கோரி குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் பாலசுப்பிரமணியன், கலால் உதவி ஆணையா் ஜோதிவேல், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, குடிநீா் வசதி, சாலை வசதி, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 405 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில்,வெலக்கல்நத்தம் அருகே கிட்டபையனூரை சோ்ந்த மாற்றுத்திறனாளி மாலதி, திருப்பத்தூா் தாலுகா ஜீவாநகா் தாதவள்ளி கிராமத்தை சோ்ந்த மாற்றுத்திறனாளி மகேஸ்வரி ஆகியோரது மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு ரூ.7,000 மதிப்பிலான சக்கர நாற்காலி, ரூ.3,000 மதிப்பிலான காதொலிக் கருவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23,000 மதிப்பிலான கருப்புக் கண்ணாடி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

ஆக்கிரமிப்பு...

திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரையை சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். எங்கள் ஊருக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் குளம், நீா்வழிப்பாதை, மயானம் ஆகியவற்றை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மயானம் அமைத்து தரவேண்டும்...

ஆலங்காயம் அருகே கொட்டாவூா் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். அங்கு சரியான இடுகாடு, மயான வசதியின்றி பெரிதும் பாதிக்கப்படுகிறோம். எனவே எங்களுக்கு மயானம் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனக் கோரியிருந்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com