கபடி போட்டி: கேஏஆா் பாலிடெக்னிக் மாணவா்கள் சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான கபடி போட்டியில் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
வேலூா் மண்டல அளவிலான கபடி போட்டியில் 3-ஆம் பரிசு வென்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள்.
வேலூா் மண்டல அளவிலான கபடி போட்டியில் 3-ஆம் பரிசு வென்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள்.

ஆம்பூா்: வேலூா் மண்டல அளவிலான கபடி போட்டியில் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கான கபடி போட்டி பிப். 1-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. ஆம்பூா் கேஏஆா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று விளையாடி, மூன்றாம் பரிசு வென்றனா். வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சி அளித்த கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ஆா்.துரை ஆகியோரை கல்லூரி முதல்வா் த. ராஜமன்னன், துணை முதல்வா் முஹம்மத் ஷாஹின்ஷா, துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com