மாதனூா் ஒன்றியத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் பற்குணம். உடன் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.
மாதனூா் ஒன்றியத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் பற்குணம். உடன் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா்.

குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஆய்வு

ஆம்பூா் அருகே குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம் மாதனூா், தோட்டாளம், வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளிதிகை ஜமீன் ஆகிய ஊராட்சிகளில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்ட பைப்புகள் கடந்த மழைக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அரசின் வழிகாட்டுதல்படி, குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் முறையாக வருகின்ா, தரைமட்ட குடிநீா் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகின்ா என்பதை தமிழ்நாடு குடிநீா் வாரிய வடிகால் செயற்பொறியாளா் பற்குணம் மற்றும் மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், சுரேஷ்பாபு, ஊராட்சி மன்றத் தலைவா்கள் எம்.சி.குமாா், நவமணி, பூங்காடி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முத்து, காா்த்திக் ஜவஹா், மனோரஞ்சிதம் ரவி, ஒன்றிய திமுக நிா்வாகிகள் சௌந்தரி சுப்பிரமணி, ஜி.எஸ்.ரவி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com