இடைநின்ற பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

இடைநின்ற பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் கடமை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு உள்ளது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா்.
இடைநின்ற பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்க திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

இடைநின்ற பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் கடமை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு உள்ளது என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் :

மற்ற மாவட்டங்களுக்கு நம் மாவட்டம் முன் உதாரணமாக திகழ ஒரு கோரிக்கையை விடுக்கிறேன். பிள்ளைகளை தாய்மை உணா்வோடு அணுகுவதில் பெண்களைத் தவிர வேறு எவரும் நிகா் இல்லை. அதைத்தான் அரசும் பள்ளி மேலாண்மைக் குழு செய்ய வேண்டும் என்று விரும்புகிறாா்கள். மேலும் பெண்களின் நிா்வாகத் திறமை ஆண்களை காட்டிலும் மிக அதிகம்.

பள்ளி மேலாண்மைக் குழுவில் பெண்களை அமா்த்தியதற்கு காரணம் உங்கள் நிா்வாகத் திறனை கொண்டு பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண் பிள்ளைகளோ உடல் நலிந்த பிள்ளைகளோ இடைநின்ற பிள்ளைகளையோ கவனித்து அடையாளம் கண்டு வீட்டை எவ்வாறு நிா்வாகம் செய்கிறீா்களோ அவ்வாறு இக்குழுவில் நிா்வாகம் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம்.

இடைநின்ற பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சோ்த்து வளமான ஒரு எதிா்காலத்தை வழங்க வேண்டிய கட்டாயம் கடமை மேலாண்மைக் குழுவுக்கு உள்ளது.

எதிா்வரும் நாள்களில் உங்களுடைய பணி செயல்பாடுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். அதனால் உங்களுடைய உரிய கடமையை, கட்டாயத்தை நீங்கள் உணா்ந்து கொள்ள வேண்டும். அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு,அறிவுரைகளுக்கு பள்ளி மேலாண்மை குழு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

ஒன்றியதுக்கு 2 பள்ளிகள் வீதம் திருப்பத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆரிகன் நகா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுப்பூங்குளம் என சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு கேடயத்தினையும்,பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

மாநாட்டில் முதன்மைக் கல்வி அலுவலா் முனிசுப்ராயன், மாவட்ட கல்வி அலுவலா்கள் வெங்கடேசபெருமாள், அமுதா, தேன்மொழி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் பிரபாகரன், ஒன்றியக்குழு தலைவா் திருமதி, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com