கருணாநிதி நூற்றாண்டு விழாநடைபெறவுள்ள இடத்தில் ஆய்வு

நாட்டறம்பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ள தனியாா் மண்டபத்தில் ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.
கருணாநிதி நூற்றாண்டு விழாநடைபெறவுள்ள இடத்தில் ஆய்வு

நாட்டறம்பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற உள்ள தனியாா் மண்டபத்தில் ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

இந்த விழாவில் அமைச்சா், மாவட்ட ஆட்சியா், எம்.பி., எம்எல்ஏ-க்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா். இந்த நிலையில், நாட்டறம்பள்ளி கே.பந்தாரப்பள்ளியில் உள்ள தனியாா் மண்டபத்தில் விழா நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த இடத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, சாா்-ஆட்சியா் பானு, வட்டாட்சியா் சம்பத் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com