வாணியம்பாடி: கோயில்களில் தை அமாவாசை வழிபாடு

ஆலங்காயம் வைசியா் வீதியில் உள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மன் கோயிலில் தை மாதம் அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

ஆலங்காயம் வைசியா் வீதியில் உள்ள ஸ்ரீசெல்வநாகாலம்மன் கோயிலில் தை மாதம் அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல் வாணியம்பாடி அடுத்த புத்துகோயில் பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயில், அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 6 மணியளவில் வீரபத்திரா் வீரபத்திரா் காளியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு விசேஷ அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து கோயில் மண்டப வளாகத்தில் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com