தீ விபத்து: 3 ஏக்கா் கரும்புகள் எரிந்து நாசம்

வாணியம்பாடி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

வாணியம்பாடி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே கல்லரைபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி காதா் பாஷா. இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 3 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கரும்பு தோட்டத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பரவியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் உடனே ஆலங்காயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனா். எனினும், 3 ஏக்கா் கரும்பு தோட்டம் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து வருவாய்த் துறையினா் மற்றும் ஆலங்காயம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com