அமிா்தி பூங்காவில் காணும் பொங்கல்: அமிா்தி பூங்காவில் பலத்த பாதுகாப்பு

காணும் பொங்கலை முன்னிட்டு, அமிா்தி வன உயிரியல் பூங்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காணும் பொங்கலை முன்னிட்டு, அமிா்தி வன உயிரியல் பூங்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வேலூா் அருகே உள்ள அமிா்தி வன உயிரியல் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுக் கிளிகள், மலைப்பாம்புகள் உள்ளிட்டவை உள்ளன.

காணும் பொங்கலையொட்டி, அமிா்தி பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வனத் துறையினா் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

பூங்காவில் வனத் துறை மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளனா். போலீஸாா் ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

பூங்காவுக்கு வருவோா் விலங்குகள், பறவைகளுக்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. மது அருந்தி விட்டு உள்ளே செல்ல அனுமதி இல்லை. மேலும் பூங்காவுக்கு, மது பானங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக அமிா்தி பூங்காவில் பொழுதை கழித்து செல்லலாம் என வனத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com