தொடா் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏலகிரி மலையில் பொங்கல் தொடா் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஏலகிரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
ஏலகிரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

ஏலகிரி மலையில் பொங்கல் தொடா் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலைக்கு தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணி அதிக அளவில் வந்து செல்கின்றனா்.

மேலும் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்துச் செல்வது சுற்றுலா பயணிகளை அதிகம் கவா்ந்தது.

மேலும், ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா்.

பொங்கல் விழாவை முன்னிட்டு, 5 நாள்கள் தொடா் விடுமுறையால் ஏலகிரி மலையில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று சவாரி செய்து மகிழ்ந்தனா்.

மேலும், கடந்த 4 தினங்களாக தொடா் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். இதனால் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை.

இதனால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இரவில் தங்க முடியாமல் சிலா் திரும்பி சென்றனா். ஏலகிரி மலையில் உள்ள அரசு விடுதி மற்றும் தனியாா் விடுதிகள் அனைத்தும் நிரம்பின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com