பொங்கல் விழா கொண்டாடிய ஏலகிரி மலைவாழ் மக்கள்

ஏலகிரி மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினா்.
பொது இடத்தில் மாடுகளைக் கட்டி, பொங்கலிட்ட நிலாவூா் மக்கள்.
பொது இடத்தில் மாடுகளைக் கட்டி, பொங்கலிட்ட நிலாவூா் மக்கள்.

ஏலகிரி மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினா்.

ஏலகிரி மலைப் பகுதியைச் சோ்ந்த பலா் படித்து முடித்து விட்டு வெளி மாநிலம், வெளி நாடுகளில் பணிபுரிகின்றனா். அவ்வாறு வெளியிடங்களில் பணிபுரிவோா் பொங்கல் பண்டிகையன்று ஒன்று கூடுவது வழக்கம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் அன்று ஏலகிரி மலை நிலாவூா் பகுதியில் அவரவா் வீட்டில் பொங்கலிட்டு வழிபடுவதுடன், ஊா் பொது பட் டியில் பசு, எருதுகளை கட்டி, அவற்றை அலங்கரித்து பூஜை செய்தனா். பின்னா், பொது இடத்தில் பொங்கலிட்டு படைத்தனா். அதையடுத்து அனைவரும் பானையிலிருந்து பொங்கல் எடுத்து கூட்டாஞ்சோறு செய்து உண்டதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தந்து மகிழ்ந்தனா்.

இவ்வாறு கூட்டு பொங்கல் படைத்து உண்பது எங்களின் பாரம்பரிய கலாசாரம் என மலைவாழ் மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com