மின்சாரம் பாய்ந்து பணியாளா் உயிரிழப்பு

வேலூரில் மின்சாரம் பாய்ந்து மின் பணியாளா் உயிரிழந்தாா்.

வேலூரில் மின்சாரம் பாய்ந்து மின் பணியாளா் உயிரிழந்தாா்.

வேலூா் அடுத்த செங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் மின் பணியாளா் சிவா (38). இவா் கடந்த 5-ஆம் தேதி வீட்டில் மின்சாதனப் பொருள்களை சரி செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உடல் கருகினாா்.

உடனே, அவா் மீட்கப்பட்டு ரத்தினகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிவா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com