கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி விழிப்புணா்வு பிரசார வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கான விளம்பர வாகனத்தை திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
போட்டிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன். உடன் எம்எல்ஏ அ.நல்லதம்பி உள்ளிட்டோா்.
போட்டிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன். உடன் எம்எல்ஏ அ.நல்லதம்பி உள்ளிட்டோா்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கான விளம்பர வாகனத்தை திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

திருப்பத்தூா் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் ஜன. 19 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டிகளுக்கான தொடா் ஓட்டப் பந்தயம் மற்றும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான விளம்பர வாகனத்தை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

மேலும், கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி நடைபெற்ற தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற்ற முதல் 3 இடங்களைப் பெற்ற 2 மாணவா்கள் மற்றும் 3 மாணவிகளுக்கும், பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற திருக்குறல் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி ஆகிய பல்வேறு போட்டிகளில் வென்ற 12 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஞானசேகரன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com